நாடாளுமன்ற தேர்தல் மாலத்தீவில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்குமா? இன்று முடிவு தெரியும்

மாலே: மாலத்தீவு நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் அதிபர் முகமது முய்சுவின் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்பது இன்று தெரிந்து விடும். இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவின் அதிபராக முகமது முய்சு கடந்த ஆண்டு பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினர் மே 10ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்படி சில ராணுவ வீரர்கள் இந்தியா திரும்பி உள்ளனர். இந்நிலையில், மாலத்தீவின் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது.

மொத்தம் 93 இடங்களுக்கு முகமது முய்சுவின் மாலத்தீவு முன்னேற்ற கட்சி உள்ளிட்ட 6 கட்சிகள் போட்டியிடுகின்றன. அந்த நாட்டின் 3 லட்சத்து 84 ஆயிரம் வாக்காளர்கள் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வரும் முய்சு சீனாவுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளார். இதனால் தேர்தல் முடிவுகளை இந்தியாவும்,சீனாவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று தெரியவரும். சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளதால் முய்சுவுக்கு தேர்தலில் மெஜாரிட்டி கிடைப்பது மிகவும் சிரமம் என கூறப்படுகிறது. முன்னாள் அதிபரான இப்ராகிம் சோலிஹ்-ன் எம்டிபி கட்சிக்கு நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் உள்ளனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் மாலத்தீவில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்குமா? இன்று முடிவு தெரியும் appeared first on Dinakaran.

Related Stories: