பெங்களூருவில் பாஜ நிர்வாகி காரில் ரூ.2 கோடி பறிமுதல்

பெங்களூரு: மக்களவை தேர்தல் கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் நாளை மறுதினம் மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். பெங்களூரு மத்திய தொகுதிக்குட்பட்ட காட்டன்பேட்டை பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு பாஜ அலுவலக செயலாளர் லோகேஷ் அம்பேகல்லுவின் காரில் ரூ.2 கோடியை பறிமுதல் செய்தனர். உடனடியாக வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த ரூ.2 கோடி பணம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக எடுத்து செல்லப்பட்டதாக லோகேஷ் அம்பேகல்லு மற்றும் பாஜ நிர்வாகிகள் வெங்கடேஷ் பிரசாத், கங்காதர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பெங்களூருவில் பாஜ நிர்வாகி காரில் ரூ.2 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: