ஆற்காடு வீராசாமி பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திமுக உயர்நிலைச் செயல்திட்டக்குழு உறுப்பினர் ஆற்காடு வீராசாமி பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: “தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் ஆற்காட்டார். உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கழகப் பற்றாளர். எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர். என்றும் மானமிகு உடன்பிறப்பு, மரியாதைக்குரிய அண்ணன் ஆற்காட்டாருக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்’’.

The post ஆற்காடு வீராசாமி பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: