எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படாது: தலைமை தேர்தல் அதிகாரி உறுதி

சென்னை: தமிழகத்தில் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படாது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினார். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு நேற்று இரவு கூறும்போது, ‘தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 68,321 வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் வாக்களித்தனர். தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மிகவும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது.

தமிழகத்தில் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படாது. அனைத்து தொகுதிகளிலும் மிகவும் பாதுகாப்பாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிகளில் உள்ள ஸ்டிராங் ரூம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவத்தினர் உள்ளிட்ட 4 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

The post எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படாது: தலைமை தேர்தல் அதிகாரி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: