தேர்தல் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள் சாலை மறியல்

 

பல்லடம், ஏப்.20: பல்லடத்தில் தேர்தல் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், பல்லடம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 417 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் பணிக்காக நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு முறையாக உணவு ஏற்பாடு செய்து தரவில்லை என வாக்குப்பதிவு முடிந்த பிறகும் ஊதியம் தரவில்லை எனக்கூறி பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் பல்லடம்-மங்கலம் சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post தேர்தல் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: