துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன் அரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமலான் கொண்டாட்டம்

துபாய்: ஏப்ரல் 14, 2024 அன்று, தமிழ் புத்தாண்டு மற்றும் ரமலான் கொண்டாட்டம், துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன் அரங்கில் அமீரக தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு வெளிநாட்டினர் பெண்கள் சங்கத்தின்(ATS/TEWA) தலைவி Dr. ஷீலு தலைமையில் நடைபெற்றது . இதில் அமீரகம் (UAE ) முழுவதிலும் உள்ள சிறப்புத் தேவையுடைய( disabled kids) குழந்தைகள் பாடுவது, கீபோர்டு மற்றும் டிரம்ஸ் போன்ற கருவிகளை வாசிப்பது மற்றும் நடனம் போன்றவற்றில் அவர்களின் குறிப்பிடத்தக்க திறமைகளை வெளிப்படுத்த ஒரு முக்கிய தளம் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு மற்றும் திறமைகளை வளர்ப்பதற்கான நோக்கத்துடன்பிரமிக்க வைக்கும் ஒரு மணி நேர கலவையில், தங்கள் திறமைகளை நிரூபித்தார்கள்.

ஒவ்வொரு குழந்தை மற்றும் பெற்றோர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களான அமல் ராஜ், அஞ்சு மற்றும் பெனி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து ஷீலு சான்றிதழ்கள் மட்டும் பரிசுப் பொருட்கள் கொடுத்து ஊக்குவித்தார். அதை தொடர்ந்து நிகழ்வின் திறமையான பின்னணிப் பாடகி, நடிகை மற்றும் இசைக்கலைஞர் லெக்ஷ்மி ஜெயன் ஆண் பெண் குரலில் பாடி மற்றும் நடனத்தால் கூட்டத்தைக் கவர்ந்தார். விழா முடிவில் காலையில் நடந்த பாட்டு மற்றும் நடனம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் மெடல் மற்றும் கோப்பைகள் வழங்கி மற்றும் விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் கௌரவித்து வந்திருந்த அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் தலைவி ஷீலு தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார்.

The post துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன் அரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமலான் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: