மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455 புள்ளிகள் சரிந்து 72,489 புள்ளிகளில் வீழ்ச்சியடைந்து நிறைவு..!!

மும்பை: காலையில் உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள், வர்த்தக நேர முடிவில் 0.62% சரிவுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 455 புள்ளிகள் சரிந்து 72,489 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்து. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 152 புள்ளிகள் சரிந்து 21,996 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 36 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. ஐடிசி பங்கு 1.6%, டெக் மகிந்திரா, பஜாஜ் ஃபின்செர்வ், ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி, விப்ரோ, எஸ்.பி.ஐ., அல்ட்ரா டெக் சிமெண்ட், சன்பார்மா பங்குகளும் தலா 1% விலை குறைந்து வர்த்தகமாயின.

The post மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455 புள்ளிகள் சரிந்து 72,489 புள்ளிகளில் வீழ்ச்சியடைந்து நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: