கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர் கைது: ரூ.81,000 பறிமுதல்

கோவை: கோவையில் வாக்காளர்களுக்கு கொடுத்த பா.ஜ.க. பிரமுகர் சிக்கினார். நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சத்திற்கு மேல் கொண்டு செல்லும் நபர்களின் வீடுகளில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கோவையில் வாக்காளர்களுக்கு கொடுத்த பா.ஜ.க. பிரமுகர் சிக்கினார்.

ஆலந்துறை பா.ஜ.க. மண்டல் தலைவர் ஜோதிமணி வைத்திருந்த ரூ.81,000-ஐ பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை பூலுவப்பட்டியில் தேநீர் கடையில் வைத்து வாக்காளர்களுக்கு வார்டு வாரியாக பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் தர முயற்சி செய்துள்ளார். வாக்காளர்களுக்கு பா.ஜ.க.வினர் பணம் தருவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து பறக்கும் படையினர் விரைந்தனர்.

தேநீர் கடையில் வைத்து பா.ஜ.க. பிரமுகரை தேர்தல் பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட பா.ஜ.க. பிரமுகர் ஜோதிமணியிடம் பணம் மற்றும் வாக்காளர்கள் பெயர் அடங்கிய பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர் கைது: ரூ.81,000 பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: