உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆணவத்துடன் பதில்

கோவை: உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில், வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். சின்னவதம்பசேரி கிராமத்தில் ஓட்டு சேகரித்த அவரிடம் பெண் ஒருவர் நீட் தேர்வு மூலம் ஏராளமான குழந்தைகள் இறக்கின்றனர். அப்படி இருக்க ஏன் அதனை கட்டாயப்படுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது அந்த பெண்ணுக்கு அண்ணாமலை ஆணவத்துடன் பதில் அளித்தார். அதாவது, தமிழ்நாட்டில் நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அண்ணாமலை தேர்தல் பரப்புரையின் போது பெண்மணி ஒருவர் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று கேட்கையில், உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என ஆணவமாக பதிலளித்தார்.

நீட் பற்றிய அண்ணாமலையின் பேச்சால் பாஜக கூட்டணியில் உள்ள பாமக அதிர்ச்சி அடைந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக கூறி வரும் நிலையில் அதனை அண்ணாமலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை 22 உயிர்கள் நீட் தேர்வால் பலி ஆகியிருக்கிறது. அது போதாது இன்னமும் உயிர் பலி வாங்குவோம் என்கிறார் அண்ணாமலை. அதுக்கும் சங்கிகள் கைத்தட்டுகிறார்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

The post உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆணவத்துடன் பதில் appeared first on Dinakaran.

Related Stories: