அந்த தகவலின் அடிப்படையில் திருமங்கலம் பகுதியில் சோதனை செய்ததில் ஐஜேகே நிர்வாகி வினோத் சந்திரன் என்பவரின் வீட்டின் கழிவறையில் ரூ.1 லட்சம் பணம் கண்டுபிடிக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே போல் அவரது வீட்டில் யார்யாருக்கு பணம் விநியோகம் செய்ய வேண்டும் என்ற புத்தகமும் அதே போல் பாரிவேந்தர் என்னென்ன சாதனைகள் செய்துள்ளார் என்பது பற்றிய புத்தகமும் இருந்தது. அத்தனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், ஐஜேகே நிர்வாகி வினோத் சந்திரனிடம் போலீசார் விசாரணை செய்கையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
The post பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட லால்குடி திருமங்கலத்தில் ஐஜேகே நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.