பாஜகவின் பொய் பிரச்சாரம் தமிழ்நாட்டில் எடுபடாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கோவை: பாஜகவின் பொய் பிரச்சாரம் தமிழ்நாட்டில் எடுபடாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மக்களவைத் தொகுதி சிங்காநல்லூர் பகுதியில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர்; கோவையில் செம்மொழிப் பூங்கா கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கோவையில் முதன்முறையாக பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும்.

கோவையில் புதிய ஐஐஎம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிங்காநல்லூர் தொகுதியில் பழுதடைந்த வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடிக்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை நிச்சயம் செய்வார். ஒன்றியத்தில் ஆட்சி அமைப்பது இந்தியா கூட்டணிதான். பாஜக ஆட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ரூ.500க்கு சிலிண்டர் வழங்கப்படும். வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் எங்களை நீங்கள் கேள்வி கேட்கலாம்.

விடுபட்ட மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். திராவிட மாடல் அரசின் திட்டங்களை பிற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன. தமிழ்நாட்டில் 4 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பிரதமர் மோடி வெள்ளத்தை பார்வையிடக் கூட வரவில்லை. தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகிறார். நீட் தேர்வால் 22 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைந்தது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் பொய் பிரச்சாரம் தமிழ்நாட்டில் எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் மானமிகு சுயமரியாதைக்காரர்கள். பாஜகவை வீட்டுக்கு அனுப்பும்வரை திமுகவுக்கு தூக்கம் கிடையாது இவ்வாறு கூறினார்.

The post பாஜகவின் பொய் பிரச்சாரம் தமிழ்நாட்டில் எடுபடாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: