பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன் நிரூபித்தால் நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

திருத்தணி: பணம் பட்டுவாடா ஆதாரத்துடன் தகவல் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தர் வரும் 19ம் தேதி நடக்க உள்ள நிலையில், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து, திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 330 வாக்குச் சாவடி மையங்களில் வசதிகள், பாதுகாப்பு குறித்து ராணிப்பேட்டை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான வளர்மதி நேற்று ஆய்வு மேற்கொண்டார். திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வாக்கு சாவடி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி உள்ளிட்ட வாக்கு மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், பணம் பட்டுவாடா தொடர்பாக ஆதாரத்துடன் தகவல் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது கோட்டாட்சியர் தீபா, டிஎஸ்பி விக்னேஷ், வட்டாட்சியர் மதியழகன், வருவாய் ஆய்வாளர் கமல் உளிட்ட வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

The post பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன் நிரூபித்தால் நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: