தென்காசி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களிள் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் மக்கள் மதிய நேரங்களில் வெளியில் போவதை முழுமையாக தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் தகிக்கிறது. வெயில் கொடுமையை போக்க ஆங்காங்கே விற்கப்படும் நீர்ச்சத்து பழங்களை வாங்கி மக்கள் சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, தென்காசி , கன்னியாகுமரி , ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயில் கொளுத்தி வரும் நிலையில் இவ்வாறு மழை பெய்வது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post தென்காசி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களிள் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: