‘குளு குளு அறிவிப்பு’.. கொளுத்தும் வெயிலுக்கு நடுவே தென்மேற்கு பருவமழை 106% வரை பெய்யும்: இந்திய வானிலை மையம் தகவல்..!!

டெல்லி: நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதோடு, இயல்பை விட மழை அதிகமாக இருக்கும் என்பது மக்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.

இந்நிலையில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை 106% வரை பெய்யும் என்றும், தென்மேற்கு பருவமழை காலத்தில் நீண்ட கால சராசரிப்படி 87 செ.மீ. மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இவ்வாண்டு இயல்பை விட கூடுதலாக பெய்யும். ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ‘குளு குளு அறிவிப்பு’.. கொளுத்தும் வெயிலுக்கு நடுவே தென்மேற்கு பருவமழை 106% வரை பெய்யும்: இந்திய வானிலை மையம் தகவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: