புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்: காங் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை

புதுச்சேரி: புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

புதுச்சேரிக்கு மாநில தகுதி-பாஜக அறிக்கையில் இல்லை:

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒரு வரி கூட குறிப்பிடவில்லை. மாநில அந்தஸ்து வழங்காமல் புதுச்சேரி மக்களை பாஜக புறக்கணிப்பது தெளிவாக தெரிகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கி, மூடப்பட்ட ஆலைகள், ரேஷன் கடைகளை மீண்டும் திறக்க காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை துணைநிலை ஆளுநரை வைத்து தொல்லை கொடுத்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை முடக்கும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது என மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

444 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியவர் மோடி: கார்கே

நாடு முழுவதும் 444 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியவர் பிரதமர் மோடி என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார். பாஜக கொள்கையை ஏற்காத அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தொல்லை கொடுக்கும் வேலை செய்கிறது மோடி அரசு என குற்றம்சாட்டினார்.

ரங்கசாமி தலையாட்டி பொம்மை போல் உள்ளார்:

புதுவை முதல்வரை பார்த்து பரிதாபப்படுகிறேன்; அவரை மோடி செயல்படவிடவில்லை. ரங்கசாமியை செயல்படவிடாமல் மோடி அரசு கைக்குள் போட்டுக்கொண்டு தலையாட்டி பொம்மை போல் வைத்துள்ளனர். புதுச்சேரியை போலவே தமிழகத்திலும் ஆளுநரை வைத்து தமிழக அரசுக்கு பாஜக நெருக்கடி கொடுத்தது என சாடினார்.

மோடி மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறார்:

பிரதமர் மோடி மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை அவரை எப்படி நம்ப முடியும். விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை தருவோம் என்ற வாக்குறுதியை மோடி நிறைவேற்றினாரா? என கார்கே கேள்வி எழுப்பினார். நாடு வளர்ச்சியடைந்துவிட்டதாக கூறும் மோடி 100 நாள் வேலை திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை? எனவும் சாடினார்.

The post புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்: காங் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை appeared first on Dinakaran.

Related Stories: