அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த முதலீட்டால் எழுந்த சர்ச்சைக்கு பின் முதலீட்டின் மதிப்பு ரூ.22,000 கோடி உயர்வு..!!

டெல்லி: பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. அதானி குழுமத்தில் செய்திருந்த முதலீடுகளின் மதிப்பீடு 59 சதவீதம் அதிகரித்துள்ளது. பங்குச் சந்தைகளின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. ஹிண்டன்பர்க் சர்ச்சையில் சிக்கிய அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த ஆண்டு கடுமையாக சரிந்தன. சாமானிய மக்கள் தங்கள் எதிர்கால தேவைக்காக எல்.ஐ.சி.யில் பாலிசி எடுக்கும் நிலையில் ஏன் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டது என கேள்வி எழுந்தது.

இந்த சூழலில் அதானி குழும பங்குகள் பங்குச் சந்தைகளில் மீண்டும் வந்துள்ளதால் எல்.ஐ.சி. செய்த முதலீட்டின் மதிப்பும் உயர்ந்துள்ளது. குறிப்பாக அதானி குழும நிறுவனங்களில் எல்.ஐ.சி. செய்த முதலீட்டின் மதிப்பு 38,471 கோடி ரூபாய் அதிகரித்து 61,210 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது பங்குச் சந்தைகளின் புள்ளி விவரங்களில் தெரிய வந்திருக்கிறது. மார்ச் 31ம் தேதி வரை அதானி குழுமத்தின் எல்.ஐ.சி. செய்த முதலீட்டின் மதிப்பு ரூ.22,000 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

The post அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த முதலீட்டால் எழுந்த சர்ச்சைக்கு பின் முதலீட்டின் மதிப்பு ரூ.22,000 கோடி உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: