தேர்தலை முன்னிட்டு வாகன சோதனை

 

ஊட்டி, ஏப். 15: நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையின் போது, இதுவரை ரூ.3.78 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறையான ஆவணம் அளித்தவர்களுக்கு ரூ.2.53 கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளது.

பணம் மற்றும் பாிசு பொருட்கள் கொண்டு வருவதை தடுத்திடும் வகையில் நீலகிாி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூா் மற்றும் கூடலூா் சட்டமன்ற தொகுதிகளுக்கு, பறக்கும் படைகள், நிலை மற்றும் நகரும் கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்புக குழுக்கள் என 72 குழுக்கள் அமைக்கப்பட்டு இக்குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோல் மற்ற மூன்று தொகுதிகளிலும் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இக்குழுவினா் கடந்த மாதம் 16ம் தேதி முதல் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை மேற்கொண்ட வாகன சோதனையில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுபாளையம், பவானிசாகர் மற்றும் அவினாசி ஆகிய தொகுதிகளில் இதுவரை ரூ.3 கோடியே 78 லட்சத்து 58 ஆயிரத்து 856 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறையாக ஆவணம் அளித்தவர்களுக்கு ரூ.2 கோடியே 53 லட்சத்து 80 ஆயிரத்து 856 திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ரூ.1 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரம் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுபாட்டில் உள்ளது. ரூ.8 லட்சத்து 62 ஆயிரத்து 44 பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த ரூ.8 லட்சத்து 52 ஆயிரத்து 266 மதிப்பிலான பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்களை அளித்தால், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீண்டும் வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தேர்தலை முன்னிட்டு வாகன சோதனை appeared first on Dinakaran.

Related Stories: