வான்கடே மைதானத்தில் இன்றிரவு பலப்பரீட்சை: மும்பையின் ஹாட்ரிக் வெற்றிக்கு தடை போடுமா சிஎஸ்கே?

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டி நடக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் 28வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதுகின்றன. கொல்கத்தா முதல் 3 போட்டியில் ஐதராபாத், பெங்களூரு, டெல்லியை வீழ்த்திய நிலையில் கடைசி போடடியில் சிஎஸ்கேவிடம் வீழ்ந்தது. இன்று சொந்த மண்ணில் வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது.

லக்னோ முதல் போட்டியில் ராஜஸ்தானிடம் தோற்றாலும் அடுத்த 3 போட்டியில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத்தை வீழ்த்தியது. ஆனால் கடைசி போட்டியில் டெல்லியிடம் தோற்றதால் இன்று வெற்றிக்காக போராடும். இரு அணிகளும் இதற்கு முன் மோதிய 3 போட்டியிலும் லக்னோவே வென்றுள்ளது.தொடர்ந்து இரவு 7.30மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. ஐபிஎல்லில் பெரிதும் எதிர்பார்க்கப்படும்போட்டி இதுதான். ஏனெனில் இரு அணிகளும் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.நடப்பு தொடரில் சிஎஸ்கே சொந்த மண்ணில் பெங்களூரு, குஜராத்தை வீழ்த்தினாலும், விசாப்பட்டினத்தில் டெல்லி, ஐதராபாத்தில் சன்ரைசசிடம் தோல்வி அடைந்தது.

கடைசி போட்டியில் சேப்பாக்கத்தில் கேகேஆரை வீழ்த்தியது. இன்று மும்பையை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தி , வெளியூரில் முதல் வெற்றிபெறும் உத்வேகத்தில் உள்ளது. பேட்டிங்கில் ஷிவம் துபே 176, கேப்டன் ருதுராஜ் 155 , ரகானே 199 ரன் அடித்துள்ளனர். பவுலிங்கில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 9 விக்கெட் எடுத்து 3வது இடத்தில் உள்ளார். மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் முதல் 3 போட்டியில் குஜராத், சன்ரைசர்ஸ், ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்த நிலையில், கடைசி 2 போட்டியில் டெல்லி, பெங்களுரை சொந்த மண்ணில் வீழ்த்தி பார்ம்முக்கு திரும்பியது.

இன்று ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் களம் காண்கிறது. பேட்டிங்கில் இஷான்கிஷன் 161, ரோகித்சர்மா 156 ரன் அடித்துள்ளனர். பவுலிங்கில் பும்ரா 9, ஜெரால்ட் கோட்ஸி 8 விக்கெட் எடுத்துள்ளனர். இரு அணிகளும் இதுவரை 36 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் மும்பை 20, சென்னை 16ல் வென்றுள்ளது. வான்கடே மைதானத்தில் 11 முறை மோதியதில், மும்பை 7, சென்னை 4ல் வென்றுள்ளன. கடைசியாக கடந்த ஆண்டு மோதிய போட்டியில் சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வான்கடே மைதானத்தில் இன்றிரவு பலப்பரீட்சை: மும்பையின் ஹாட்ரிக் வெற்றிக்கு தடை போடுமா சிஎஸ்கே? appeared first on Dinakaran.

Related Stories: