தேனி மாவட்டத்தில் பறக்கும் படையினர் ரூ.1.58 கோடி பறிமுதல்

 

தேனி, ஏப்.13: தேனி மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலைக்கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடியே 58 லட்சத்து 64 ஆயிரம் ரொக்கப்பணத்தில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 41 ஆயிரத்து 900 உரிய ஆவணங்களை காண்பித்ததால் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலையொட்டி தொகுதி முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலைக்கண்காணிப்புக்குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, தேனி மாவட்டத்தில் கடந்த் மாதம் 17ம் தேதி முதல் நேற்று வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதாக கூறி ரூ.1 கோடியே 58 லட்சத்து 64 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ.1 கோடியே27 லட்சத்து 41 ஆயிரத்து 900 உரிய ஆவணங்களை காண்பித்ததால் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.32 லட்சத்து 18 ஆயிரத்து 615 தேனி மாவட்ட கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The post தேனி மாவட்டத்தில் பறக்கும் படையினர் ரூ.1.58 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: