தூத்துக்குடியில் நாளை முதல் தீப்பெட்டி ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்: நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நாளை முதல் ஏப்.22 வரை தீப்பெட்டி தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் என்று நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர மற்றும் முழுநேர தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தீப்பெட்டியின் தேவையை 80% பூர்த்தி செய்து வருகிறது. மேலும் தீப்பெட்டி உற்பத்தியை பாதிக்கும் வகையில் தற்போது பிளாஸ்டிக் லைட்டர்கள் குறைந்த விலையில் மார்க்கெட்டில் கள்ளத்தனமாக விற்பதால் தீப்பெட்டி உற்பத்தியில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதற்கு நிரந்தர தீர்வு எட்டாத நிலையில், நாளை முதல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஏப்ரல் 22ம் தேதி வரை தற்காலிக தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு கிடைத்த பிறகே தீப்பெட்டி உற்பத்தி மீண்டும் நடைபெறும் என்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே தீப்பெட்டி பண்டல்கள் கையிருப்பு அதிகமாக உள்ளதால் மூலப் பொருள் வாங்கியோருக்கு பணம் தர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post தூத்துக்குடியில் நாளை முதல் தீப்பெட்டி ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்: நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: