ஆதனக்கோட்டை பகுதியில் கொத்து கொத்தாக காய்க்க துவங்கிய மாங்காய்


கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை மற்றும் சுற்றுப்புறங்களில் மாங்காய் காய்க்க தொடங்கியுள்ளது. முக்கனிகளில் ஒன்றான மாங்காய் காய்க்க தொடங்கியுள்ளதால், தோட்டத்தின் உரிமையாளர்கள் தோட்டத்தை சுற்றிலும் வேலி அமைந்து காவல் காத்து வருகிறார்கள். ஒருசில மரங்கள் வைத்திருப்பவர்கள் மரத்தை சுற்றிலும் முட்களை வெட்டி போட்டு வேறு நபர்கள் செல்லாத வகையில் பாதுகாத்து வருகின்றனர். இப்பகுதி மாங்காய்கள் புளிப்பு தன்மை அற்றதாக இருப்பதால் சுவை அதிக அளவில் இருக்கும் என்று மரத்தில் உரிமையளார்கள் தெரிவிக்கின்றனர்.

முதல் பருவத்தில் காய்க்கும் காய்களை பரிந்துவிட்டுமறு பருவ காய்களை பழத்துக்கு விட்டுவிட்டால் பழம் சுவையாக இருக்கும் என்று கூறுகிறார்கள். மாங்காயில் ஊறுகாய், மாவத்தல், மா தொக்கு, போன்றவற்றை போட்டு வைத்து கொண்டால் எக்காலத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். மேலும் மாதா ஊட்ட சோத்தை மாங்காய் ஊட்டும் என்னும் சொல் கிராமங்களில் வழக்கத்தில் உள்ளது. ஊறுகாய் வகையில் மாங்காய் ஊறுகாய்க்கு தனிசிறப்பிடம் உள்ளது.

எத்தனை மாங்காய் வகை இருந்தாலும் மல்கோவா, பங்கனபள்ளி, செந்தூராவிற்கு தனி சிறப்பு உண்டு என்று கூறுகிறார்கள். மேலும் மாமரம் வீடு கட்டும்போது ஜன்னல் கதவு செய்யவும், பல்வேறு மரப்பொருட்கள் செய்யும் பயன்படுகிறது. இளைய தலைமுறையினர் மாமரங்களை வைத்து வளர்க்க முன் வர வேண்டும் நாம் ஒரு முறை மரம் வைத்தால் எதிர்கால சந்ததிகளுக்கு செய்யும் நன்மை என்று கூறுகிறார்கள்.

The post ஆதனக்கோட்டை பகுதியில் கொத்து கொத்தாக காய்க்க துவங்கிய மாங்காய் appeared first on Dinakaran.

Related Stories: