இஸ்ரேல் விமான தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் பலி

ஜெருசலேம்: இஸ்ரேல் விமான தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் 3 மகன்கள் மற்றும் 4 பேரக்குழந்தைகள் உயிரிழந்தன என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 6 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில்,பாலஸ்தீனத்தின் முக்கிய நகரமான காசா உள்ளிட்ட நகரங்களின் வீடுகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை குண்டுவீச்சுக்கு இலக்காகி சின்னாபின்னமாகி சிதைந்து உள்ளன.

இந்நிலையில் மத்திய காசாவில் இஸ்ரேல் விமானங்கள் நேற்றுமுன்தினம் குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதில் ஹமாஸ் படையின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் 3 மகன்கள்,4 பேரக்குழந்தைகள் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்மாயில் ஹனியே தற்போது கத்தாரில் தலைமறைவாக உள்ளார். ஹமாஸ்சின் முன்னணி தலைவர் யெஹ்யா சின்வார் காசாவில் உள்ளார்.

The post இஸ்ரேல் விமான தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: