ஈரோடு, ஏப். 11: ஈரோடு அருகே எல்லீஸ் பேட்டையில் உள்ள பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் என்.கே.கே.பெரியசாமி தலைமை தாங்கினார். கல்லூரி துணை தலைவர்கள் என்.கே.கே.பி.சத்யன், என் கேகே.பி.ராஜா, பொருளாளர் முருகன், இணைச்செயலர்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, முதன்மை செயல் அலுவலர் என்.கே.கே.பி.நரேன்ராஜா, நிர்வாக அலுவலர் அருள்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான சதாசிவம் பங்கேற்று, கல்லூரியில் 2019-22ம் கல்வியாண்டில் இளங்கலை படிப்பை முடித்த மாணவ-மாணவிகளுக்கும், 2020-22ம் கல்வியாண்டில் முதுகலை படிப்பை முடித்த மாணவ-மாணவிகளுக்கும், பாரதியார் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற பல்வேறு துறைகளை சா்ந்த மாணவ-மாணவிகள் உட்பட 600க்கும் மேற்பட்டோரை பாராட்டி பட்டங்களை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் வானதி ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் சுரேஷ்பாபு மற்றும் மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.