22 வேட்பாளர்கள் ஆர்ஜேடி அறிவிப்பு: லாலுவின் 2 மகள்களுக்கும் சீட்

பாட்னா:  பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி),காங்கிரஸ், இந்திய கம்யூ.,விகாஸ்ஷீல் இன்சான் கட்சி(விஐபி) உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.ஆர்ஜேடிக்கு 26 தொகுதிகளும், காங்கிரசுக்கு 9 தொகுதிகளும்,இடது சாரிகளுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ஆர்ஜேடி கட்சி 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்றுமுன்தினம் அறிவித்தது. அதில், பாடலிபுத்ரா தொகுதியில் லாலு பிரசாத்தின் மூத்த மகள் மிசா பார்தி மீண்டும் போட்டியிடுகிறார்.அந்த தொகுதியில் அவர் 2 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

பாடலிபுத்ராவின் தற்போதைய எம்பியான ராம்கிருபாலை எதிர்த்து அவர் களம் இறங்கியுள்ளார். சரண் தொகுதியில் லாலுவின் இன்னொரு மகளான ரோகினி ஆச்சார்யா போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் லாலு பிரசாத் பல முறை போட்டியிட்டு வென்றுள்ளார். ஆர்ஜேடி கட்சி தன்னுடைய ஒதுக்கீட்டில் கிடைத்துள்ள 26 தொகுதிகளில் 3 தொகுதியை விஐபி கட்சிக்கு விட்டு கொடுத்துள்ளது. சிவான் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

The post 22 வேட்பாளர்கள் ஆர்ஜேடி அறிவிப்பு: லாலுவின் 2 மகள்களுக்கும் சீட் appeared first on Dinakaran.

Related Stories: