பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார்; விசாரணை அமைப்புகளை பாஜகவின் ஒரு அங்கமாக மாற்றிவிட்டார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தலுக்காக இத்தனை முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். வன்முறையால் பற்றி எறிந்த மணிப்பூருக்கு எத்தனை முறை மோடி சென்றுள்ளார்? புல்வாமா தாக்குதலை எப்படியெல்லாம் மோடி அரசியல்படுத்தினார் என்பதை அப்போதைய காஷ்மீர் ஆளுநர் கூறியதும், உடனே அவரது வீட்டில் ரெய்டு நடந்தது. மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை. பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் மோடி, டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் வடித்தபோது எங்கே போனார்?.

மணிப்பூரில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட போது என்ன சொன்னார்?. குஜராத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்தது பாஜக அரசு. சமூக நீதி அக்கறை கொண்ட பிரதமரை வரும் தேர்தலில் தேர்வு செய்ய வேண்டும். காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடியிலும் நலத்திட்டங்களை தமிழக அரசு செய்து கொண்டு இருக்கிறது. திராவிட மாடல் அரசு கல்விக்கான திட்டங்களை பார்த்து பார்த்து உருவாக்கி வருகிறது. சேது சமுத்திரம் திட்டம் முதல் எய்ம்ஸ் வரை எதையுமே நிறைவேற்றாதவர் பிரதமர் மோடி” இவ்வாறு அவர் பேசினார்.

The post பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார்; விசாரணை அமைப்புகளை பாஜகவின் ஒரு அங்கமாக மாற்றிவிட்டார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: