இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மா,”முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்பு சலுகையும் காட்ட முடியாது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் கெஜ்ரிவால் சதி செய்தது உறுதியாகி இருக்கிறது. பொது வாழ்வில் உள்ளவர்கள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். கெஜ்ரிவால் கைது சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதே தவிர, தேர்தலின்போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல. தேர்தல் நேரம் என்பதால் விசாரணைக்கு வர முடியாது என கெஜ்ரிவால் கூறியதை ஏற்க முடியாது.
மற்றவர்களுடன் இணைந்து முறைகேட்டில் கெஜ்ரிவாலும் ஈடுபட்டிருக்கிறார் என்பதை காண முடிகிறது. நீதிபதிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்; அவர்கள் அரசியல் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவர்கள். நீதிமன்றங்கள் அரசியலுக்குள் செல்ல முடியாது; அரசியல் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் முன் செல்லாது. கெஜ்ரிவால், மத்தியஅரசு இடையேயான பிரச்னை கிடையாது; ED, கெஜ்ரிவால் இடையேயான சட்ட விவகாரம். தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது,” இவ்வாறு கூறி கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தார்.
The post முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்பு சலுகையும் காட்ட முடியாது : அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அதிரடி!! appeared first on Dinakaran.