இதையடுத்து நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது. முதல் 2 போட்டிகளிலும் அதிரடியாக 200 ரன்களுக்கு மேல் எளிதாக குவித்து மிரட்டிய ஐதராபாத் அணி மீண்டும் தனது அதிரடியை தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம் பேட்டிங்கில் கலக்கி வருகின்றனர். கம்மின்ஸ், நடராஜன் வேகத்தில் அசத்துகின்றனர். ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார் ஆகியோரும் இன்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசினால் பஞ்சாப் அணியை வீழ்த்துவது எளிது. இன்றைய போட்டியில் 3வது போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் இரு அணிகளும் வரிந்து கட்டும். இருப்பினும் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் வலிமையால் பஞ்சாப் அணியை பஞ்சராக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post முல்லாப்பூரில் இன்று மோதல்; பஞ்சாப்பை வீழ்த்த சன்ரைசர்ஸ் ஆயத்தம் appeared first on Dinakaran.