கே.வி.குப்பம் அருகே தேர்தல் முன்னிட்டுசி.ஆர்.பி.எப் வீரர்களுடன் போலீசார் கொடி அணிவகுப்பு

கே.வி.குப்பம், ஏப்.7: தேர்தல் முன்னிட்டு, கே.வி‌.குப்பத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்களுடன் போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, தேர்தல் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் போலீசார் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி பகுதியில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

டிஎஸ்பி சரவணன் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் தமிழகம்‌ மற்றும் ஆந்திரா போலீசார் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். லத்தேரி – திருமணி சாலையில் உள்ள அன்னங்குடி சர்ச் பகுதியில் துவங்கிய ஊர்வலம் சந்தைமேடு, லத்தேரி பஸ் நிறுத்தம் வரை சென்று நிறைவடைந்தது. இதில், இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கே.வி.குப்பம் அருகே தேர்தல் முன்னிட்டுசி.ஆர்.பி.எப் வீரர்களுடன் போலீசார் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: