கெஜ்ரிவால் கைதை கண்டித்து பஞ்சாப் முதல்வர் இன்று உண்ணாவிரத போராட்டம்: பொதுமக்களும் பங்கேற்க அழைப்பு

சண்டிகர்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், பிஆர்எஸ் தலைவர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் ஏப்ரல் 15 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இது பாஜவின் அரசியல் பழி வாங்கும் செயல் என குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மி, இந்தியா கூட்டணி கட்சியினர், கெஜ்ரிவால் கைதை கண்டித்து கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரும் போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் ஷஹீத் பகத் சிங் நகர் மாவட்டம் கட்கர் கலனில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்க ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது.

The post கெஜ்ரிவால் கைதை கண்டித்து பஞ்சாப் முதல்வர் இன்று உண்ணாவிரத போராட்டம்: பொதுமக்களும் பங்கேற்க அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: