வத்தலக்குண்டு விருவீடுவில் கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வு

வத்தலக்குண்டு, ஏப். 5: வத்தலக்குண்டு அருகேயுள்ள விருவீடு பகுதியில் வேடசந்தூர் எஸ்ஆர்எஸ் வேளாண்மை கல்லூரி மாணவிகள் முகாமிட்டு களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அப்பகுதியில் மாடுகள் வளர்ப்பவர்களை நேரில் சென்று சந்தித்து, மாடுகளுக்கு கோமாரி நோய் வராமல் எவ்வாறு தடுத்து பாதுகாப்பது குறித்தும், மாடுகளின் வளர்ப்பு குறித்தும் விளக்கி கூறினர். இதில் மாணவிகள் தீபனா, தீப, துர்கா தேவி, கவுசிகா, இன்முகில், ஜெயந்தி, கல்யாணி சுரேஷ், காவேரி, கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். விவசாயிகள் மாணவிகளுக்கு நன்றி கூறினர்.

The post வத்தலக்குண்டு விருவீடுவில் கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: