கும்பகோணத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கும்பகோணம், ஏப்.4: கும்பகோணம் மகாமகம் அன்னதான சேவா சங்கம் சார்பில் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டாட்சியர் பங்கேற்று துவக்கி வைத்தார். கும்பகோணம் மகாமகம் அன்னதான சேவா சங்கம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை வகித்து தமிழகத்தில் 100% வாக்களிக்க வேண்டி அனைவரும் வாக்களிப்பதும் வாக்களிக்க வைப்பதும் ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி துவக்கி வைத்தார். இதில் தாசில்தார் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், சமூக சேவகர்கள் தாமரை மணி, கண்ணன் மற்றும் செந்தில் உள்ளிட்டார் தாலுகா அலுவலக ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்களிக்க வேண்டிய அவசியங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

The post கும்பகோணத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: