சோலைமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.55 லட்சம்

மதுரை, ஏப். 4: அழகர்கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ள முருகனின் ஆறாம் படைவீடான சோலைமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணிகள் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம்.  இதன்படி சோலைமலை முருகன் கோயில் சஷ்டி மண்டபத்தில் காணிக்கைகள் கணக்கிடும் பணிகள் நேற்று நடைபெற்றது. இதன் முடிவில் ரூ.55 லட்சத்து 46 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கம், 36 கிராம் தங்கம், 2312 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வெளிநாட்டு டாலர்களும் கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த காணிக்கை கணக்கிடும் பணிகள் கோயில் துணை ஆணையர் கலைவாணன், மதுரை கூடலழகர் கோயில் உதவி ஆணையர் செல்வி ஆகியோர் கண்காணிப்பில் நடைபெற்றது. இதில் கோயில் அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி, மற்றும் அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, மேலாளர் தேவராஜ் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சோலைமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.55 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: