ராசிபுரம் அருகே 2.75 லட்சம் மதிப்பிலான 3,000க்கும் மேற்பட்ட அதிமுக சின்னம் பொறிக்கப்பட்ட டீ சர்ட் பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் செங்கோட்டுவேல் தலைமையிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து தனியார் கொரியர் கண்டனர் லாரியானது கரூரை நோக்கி சென்று கொண்டிருந்தது அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் கண்டனர் லாரியில் 3000க்கும் மேற்பட்ட டீ சர்ட்களில் அதிமுக சின்னம் பொறிக்கப்பட்டும், அதில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்,ஜெயலலிதா, மற்றும் எடப்பாடியார் புகைப்படங்கள் டீசர்ட்டுககளில் அச்சிடப்பட்டுள்ளது.

டீ சர்ட்டில் தமிழக உரிமை மீட்போம் தமிழ்நாடு காப்போம் என்ற வசனத்துடன் கூடிய,விஜயபாஸ்கர் படம் பொறிக்கப்பட்டு கரூர் மாவட்டம் எனவும் அச்சிடப்பட்ட டீசர்ட்டுகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரியை அதிகாரிகள் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்ற நிலையில் தற்போது பிடிபட்ட வாகனத்தை கொண்டு வெண்ணந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டெய்னர் லாரியில் உள்ள டீசர்ட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட கொண்டு செல்லப்பட்டதா அல்லது அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக கொண்டு சென்றனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் லாரியானது திருப்பூரில் இருந்து டீ சர்டைகளை ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி சென்றதாகவும், லாரியில் ரூ.2,75,000 மதிப்பிலான 3000க்கும் மேற்பட்ட டீ சர்ட்கள் பறிமுதல் செய்தும் சம்பந்தபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதாக வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் சுகவனம்தெரிவித்தார்.

The post ராசிபுரம் அருகே 2.75 லட்சம் மதிப்பிலான 3,000க்கும் மேற்பட்ட அதிமுக சின்னம் பொறிக்கப்பட்ட டீ சர்ட் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: