தேசம் என்பது பாரபட்சம் இல்லாமல் அனைத்து மொழிகளையும் பாரபட்சமில்லாமல் பேசி மகிழ்ந்திருப்பது.
இந்தியாவில் மதக்கலவரங்கள் இல்லாத மாநிலம் என்றால் அது தமிழகம் மட்டும் தான். இதுவே ஒரு நல்ல அரசு. நல்ல நிர்வாகம். நல்ல அரசியல் நடைபெறுகிறது என்பதற்கான அடையாளம். நான் இங்கு வந்து நிற்பது சீட்டுக்காக அல்ல நாட்டுக்காக என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல நேரங்களில் ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என்ற அமைப்புகளை வேட்டை நாயை போல பயன்படுத்துகிறது.
நான் ஒழுங்காக வரி கட்டுகிறவன். இதுவரை அவர்கள் எனக்காக வேலை பார்த்தார்கள். ஆனால் இன்று அவர்களுக்கு வீட்டு வேட்டை நாய்களாக மாறிவிட்டார்கள். பாஜ சுடும் வடையை திண்றால் ஒருபோதும் பசி ஆறாது. அதற்கு காரணம் அவர்கள் வாயால் மட்டுமே வடை சுட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
The post பாஜவின் வேட்டை நாயாக மாறிய ஈ.டி, ஐ.டி : கமல் கடும் தாக்கு appeared first on Dinakaran.