பிசப் வாலஸ் கிழக்கு சாலை வழியாக கதீட்ரல் சாலை செல்லும் வாகனங்கள், மியூசிக் அகாடமி சந்திப்பில் யூடர்ன் எடுத்து சவேரா ஓட்டல் முன்பாக உள்ள சர்வீஸ் ரோடில் சென்று நீல்கிரீஸ் சந்திப்பை அடைந்து, அங்கு யூடர்ன் எடுத்து மியூசிக் அகாடமி மேம்பாலம் வழியாக கதீட்ரல் சாலை சென்று தங்களின் இலக்கை அடையலாம். வி.பி.ராமன் சாலை, லாயிட்ஸ் சாலை, இந்தியன் வங்கி சந்திப்பில் இருந்து, டிடிகே சாலை வழியாக மியூசிக் அகாடமி சந்திப்பு வலதுபுறம் உள்ள சர்வீஸ் ரோடு வழியாக கதீட்ரல் சாலை செல்லும் வாகனங்கள், இடதுபுறம் திரும்பி சவேரா ஓட்டல் முன்பு உள்ள சர்வீஸ் ரோடில் சென்று நீல்கிரீஸ் சந்திப்பை அடைந்து யூடர்ன் எடுத்து மியூசிக் அகாடமி மேம்பாலம் வழியாக கதீட்ரல் சாலை சென்று தங்களின் இலக்கை அடையலாம்.
ஜே.ஜே.சாலை, அம்மன் சீனிவாசன் சாலை அம்புஜம்மாள் தெரு, பாஷ்யம் பஷிர் அகமது தெரு மற்றும் பார்த்தசாரதி கார்டன் தெரு வழியாக வரும் வாகனங்கள் டிடிகே சாலை வந்து மியூசிக் அகாடமி சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பாமல் வலதுபுறம் திரும்பி சவேரா ஓட்டல் முன்பு உள்ள சர்வீஸ் ரோடில் சென்று நீல்கிரீஸ் சந்திப்பை அடைந்து யூடர்ன் எடுத்து மியூசிக் அகாடமி மேம்பாலம் வழியாக கதீட்ரல் சாலை சென்று தங்களின் இலக்கை அடையலாம்.
இவ்வாறு போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
The post இன்று முதல் 7 நாட்களுக்கு கதீட்ரல் சாலையில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.