லியோ முத்து 72ம் ஆண்டு பிறந்தநாள் விழா 1 கோடியில் நலத்திட்ட உதவிகள்: சாய் பிரகாஷ் லியோ முத்து வழங்கினார்

தாம்பரம்: சாய்ராம் கல்வி குழும நிறுவனர் லியோ முத்து 72ம் ஆண்டு பிறந்தநாள் விழா, கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் லியோ முத்து கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சாய்ராம் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ₹50 லட்சம் மதிப்பில் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது.

மேலும் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம், செட்டிபுண்ணியம் திருக்கோயிலை சீரமைக்க ₹15 லட்சம் நன்கொடை வழங்கி  சாய்ராம் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து பேசுகையில், ‘தாளாளர் லியோ முத்து அறக்கட்டளையின் நோக்கம், ஒட்டுமொத்த சமூக வளர்ச்சி அவர்களுடைய மகிழ்ச்சி மிகவும் முக்கியம் என்று கருதும் அவரது நினைவு நாளில் இன்னும் பலருக்கும் பயன்படக்கூடிய சிறந்த சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்,’ என்றார்.

நிகழ்ச்சியில் அறக்கட்டளை துணை தலைவர் கலைச்செல்வி லியோ முத்து, நிர்வாக இயக்குநர் எஸ்.சத்தியமூர்த்தி, அறங்காவலர்கள் சர்மிளா ராஜா, ரேவதி சாய் பிரகாஷ், மூர்த்தி, சதீஷ் குமார், முனுசாமி, பாலசுப்பிரமணியம், கல்லூரி முதல்வர்கள் முனைவர் கே.பொற்குமரன், முனைவர் கே.பழனிகுமார், மேலாண்மை துறை தலைவர் க.மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி அருகே உள்ள தர்காஸ் மற்றும் எருமையூர் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. மேலும் 200க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு பேனா, புத்தகம், பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

The post லியோ முத்து 72ம் ஆண்டு பிறந்தநாள் விழா 1 கோடியில் நலத்திட்ட உதவிகள்: சாய் பிரகாஷ் லியோ முத்து வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: