பாப்பிரெட்டிப்பட்டி அருகே வைக்கோல் லாரியில் பயங்கர தீ: மின்கம்பி உரசியதில் விபத்து


பாப்பிரெட்டிப்பட்டி: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் பாலமுரளி(48). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதியில் இருந்து தனது ஈச்சர் லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் விற்பனைக்கு கொண்டு சென்றார். பி‌.பள்ளிப்பட்டி கிராமத்தில் இருந்து, ஜங்காலஹள்ளி கிராமத்திற்கு சென்றபோது, சாலையின் குறுக்கே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் வைக்கோல் உரசியதில் தீப்பற்றிக்கொண்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த 250 வைக்கோல் கட்டுகள் எரிந்து சாம்பலானது. லாரியில் தீ பிடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பாலமுரளி கொடுத்த புகாரின் பேரில், பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post பாப்பிரெட்டிப்பட்டி அருகே வைக்கோல் லாரியில் பயங்கர தீ: மின்கம்பி உரசியதில் விபத்து appeared first on Dinakaran.

Related Stories: