கச்சத்தீவை பொறுத்தவரை இலங்கையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது: இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்

கொழும்பு: கச்சத்தீவை பொறுத்தவரை இலங்கையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார். இலங்கைக்கு கச்சத்தீவை இந்திரா காந்தி தாரை வார்த்து விட்டதாக பாஜ குற்றம் சாட்டி வருகிறது. தேர்தல் காலத்தில் கச்சத்தீவை அரசியல் ஆக்க பா.ஜ.க நாடகமாடி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மக்களவை தேர்தல் சமயத்தில் கச்சத்தீவு விவகாரத்தை பிரதமர் மோடி மீண்டும் கிளப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கச்சத்தீவை மீட்கும் பணிகளை இந்திய அரசு தொடங்கி உள்ளதாக அண்ணாமலை கூறிய நிலையில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்; கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அனுப்பவில்லை. கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை. அப்படி தொடர்பு இருந்தால், இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதில் அளிக்கும். இலங்கையைப் பொறுத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது இவ்வாறு கூறினார்.

 

The post கச்சத்தீவை பொறுத்தவரை இலங்கையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது: இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: