கச்சத்தீவை மீட்போம் என்று அறிவித்த மோடி அரசு பத்தாண்டாக என்ன செய்து கொண்டிருந்தது: காங்கிரஸ் கேள்வி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கை: 50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்டது பிரதமர் மோடிக்கு இப்போது தான் தெரிந்திருக்கிறது. இந்தியா கூட்டணி மீது குற்றச்சாட்டுகளை சுமத்த ஏதும் இல்லாமலும், பாஜ மீது மக்களுக்கு அதிகரித்து வரும் அதிருப்தியைப் பார்த்து மிரண்டு போய் கச்சத்தீவை கையில் எடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.

தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லாத பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு மீது ஏன் திடீர் பாசம், எல்லாம் தேர்தல் செய்த மாயம் தான். கச்சத்தீவை மீட்போம் என்று அறிவித்த மோடி அரசு, பத்தாண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தது. ஒன்றிய பாஜ ஆட்சியில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளானபோதும், கைது செய்யப்பட்ட போதும்,படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட போதும் மோடி என்ன செய்து கொண்டிருந்தார்.

ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும்போது கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மோடிக்கு, கச்சத்தீவைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு சாதித்தவை ஏராளம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கச்சத்தீவை மீட்போம் என்று அறிவித்த மோடி அரசு பத்தாண்டாக என்ன செய்து கொண்டிருந்தது: காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: