டி காக் 54, பூரன் 42, க்ருணால் 43* ரன் விளாசல் பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது லக்னோ

லக்னோ: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 21- ரன் வித்தியாசத்தில் வென்றது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் ‘இம்பாக்ட்’ வீரராக களமிறங்கியதால், அவருக்கு பதிலாக நிகோலஸ் பூரன் தலைமை பொறுப்பேற்றார். டாஸ் வென்ற பூரன் பேட்டிங்கை தேர்வு செய்ய… டி காக், கே.எல்.ராகுல் இணைந்து எல்எஸ்ஜி இன்னிங்சை தொடங்கினர்.
ராகுல் 15, படிக்கல் 9, ஸ்டாய்னிஸ் 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். லக்னோ 8.4 ஓவரில் 78 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், டி காக் – பூரன் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். டி காக் 34 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தது.

டி காக் 54 ரன் (38 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), பூரன் 42 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் பதோனி 8, பிஷ்னோய் 0, மோஷின் 2 ரன்னில் அணிவகுத்தனர். எனினும், க்ருணால் அதிரடியாக பந்தை பறக்கவிட லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன் குவித்தது. க்ருணால் 43 ரன் (22 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), நவீன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் சாம் கரன் 3, அர்ஷ்தீப் 2, ரபாடா, ராகுல் சஹார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன் மட்டுமே எடுத்து, 21 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஷிக்கர் தவான் அதிகபட்சமாக 70 ரன் (50 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். பேர்ஸ்டோ 42 ரன், லிவிங்ஸ்டோன் 28 ரன் எடுத்தனர். லக்னோ பந்துவீச்சில் மயங்க் யாதவ் 3 விக்கெட்,மோஷின் 2 விக்கெட் வீழ்த்தினர். லக்னோ அணி 2 புள்ளிகள் பெற்றது.

The post டி காக் 54, பூரன் 42, க்ருணால் 43* ரன் விளாசல் பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது லக்னோ appeared first on Dinakaran.

Related Stories: