வருமானவரி நோட்டீஸ் பற்றி பரப்புவது தேர்தல் ஆதாயம் தேடும் குறுகிய பார்வை கொண்டது: முத்தரசன் விமர்சனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமானவரித்துறை ரூ.11 கோடி வரி பாக்கி நோட்டீஸ் கொடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. வருமானவரித் துறைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வரிவிலக்கு தொடர்பான கடிதப் போக்குவரத்து இருந்து வருகிறது.கட்சிக்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற முறையீடு, தீர்வு காணப்படாமல் நிலுவையில் இருக்கிறது.

மாநில அலுவலக கட்டிடம் தொடர்பான கடன் தவணை, வாடகை வருமானம், இதற்கான ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட வரியினங்கள் முறையாகவும் காலம் தவறாமலும் செலுத்தி வருகிறது. ஆனால், இதனை மறைத்து, வருமானவரித்துறையின் நோட்டீஸ் குறித்து பரப்பப்படும் செய்தி தேர்தல் ஆதாயம் தேடும் குறுகிய பார்வை கொண்டது.

The post வருமானவரி நோட்டீஸ் பற்றி பரப்புவது தேர்தல் ஆதாயம் தேடும் குறுகிய பார்வை கொண்டது: முத்தரசன் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: