வரத்து அதிகரிப்பால் தேவாரத்தில் தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

தேவாரம்: தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த 7 மாதம் முன்பு தேவாரம் பகுதியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வீடுகளில் உணவு சமைப்பதற்கு தக்காளியை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். உணவில் தக்காளிக்கு பதிலாக புளியை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தக்காளி வரத்தை அதிகரிக்கவும் விலையை கட்டுப்படுத்தவும் அரசின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக தேவாரம், உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, ஆணைமலையன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் தக்காளி பறிப்பு அதிகரித்ததால் சந்தைக்கு ரத்து மீண்டும் அதிகரித்தது.

கடந்த 1 மாதம் முன்பு வார சந்தையில் கிலோ ரூ.40க்கு விற்பனையான தக்காளி தற்போது கிலோ ரூ.15 ஆக குறைந்தது. இந்த நிலையில் வரத்து மேலும் அதிகரித்ததால் தக்காளியின் விலை ரூ.12 முதல் 15 ரூபாய்க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.12 முதல் ரூ.15 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை கணிசமாக குறைந்ததால் அதன் விற்பனை அதிகரித்தது. தேனி மாவட்டத்தில் சந்தையில் தக்காளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post வரத்து அதிகரிப்பால் தேவாரத்தில் தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: