நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

 

திருப்பூர், மார்ச் 29: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பூர் மாநகரில் துணை ராணுவத்தினர் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காக கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் 15.வேலம்பாளையம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வந்து வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் துணை ராணுவத்தினர் தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு நேற்று மாலை நடைபெற்றது.

இந்த கொடி அணிவகுப்புக்கு மாநகர குற்ற ஆவண காப்பக உதவி கமிஷனர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். 15. வேலம்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன், வடக்கு இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் 53 துணை ராணுவத்தினர் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பு ஆத்துப்பாளையத்தில் தொடங்கி முக்கிய வீதிகளில் சென்று 15.வேலம்பாளையம் கரிய காளி அம்மன் கோயில் பகுதியில் நிறைவு பெற்றது. அதே போல எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தொடங்கி வளையங்காட்டில் நிறைவு பெற்றது. இந்த கொடி அணிவகுப்பை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: