திருவாடானை அம்மன் கோயில் விழாவில் அரவான் படுகளம் நிகழ்வு

திருவாடானை, மார்ச் 29: திருவாடானையில் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மகாபாரத கதையை நினைவு கூரும் வகையில் அரவான் படுகளம் நிகழ்வு நடைபெற்றது. திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட் தர்மர், திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். மகாபாரத கதையை நினைவு கூரும் வகையில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினசரி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மகாபாரதத்தை நினைவு கூரும் வகையில், அதில் நடந்த அரவான் படுகளம் பகுதி நிகழ்வு நடந்தது. முன்னதாக கோயில் பூசாரி காளி வேடமிட்டு கோயிலில் இருந்து புறப்பட்டு திருவாடானை நகர் முழுவதும் ஊர்சுற்றி வந்து அரவான் படுகள நிகழ்வு நடந்தது. இதனை தொடர்நது நள்ளிரவு எறி சோறு வீசும் நிகழ்வு நடைபெற்றது. இதனை இப்பகுதி மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றுச் சென்றனர்.

The post திருவாடானை அம்மன் கோயில் விழாவில் அரவான் படுகளம் நிகழ்வு appeared first on Dinakaran.

Related Stories: