ராதிகாவுக்கு ‘சீட்’ புலம்பும் குஷ்பு: ஓரங்கட்டும் பாஜ

தமிழகத்தில் 19 தொகுதிகளில் பாஜ போட்டியிடுகிறது. அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை, நயினார் நாகேந்திரன், ராதிகா என பிரபலமானவர்கள், பணபலம் படைத்த தொழிலதிபர்களே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகையும், பாஜ செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவுக்கும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் அவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.

சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் ஏதேனும் ஒன்று குஷ்புவுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் குஷ்பு விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியில் சேர்ந்த சில நாட்களில் ராதிகாவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. நான் கடந்த சில தேர்தல்களாகவே சீட் கேட்டு வருகிறேன். ஆனால் எனக்கு கொடுக்கவில்லை என்று நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம்.

இதுபற்றி பாஜ வட்டாரத்தில் விசாரித்த போது, ‘எதை எங்கு பேச வேண்டும் என்று குஷ்புவுக்கு தெரியவில்லை. தமிழக அரசு வழங்கும் உரிமை தொகையை பிச்சைக்காசு என பேசி பெண்களை இழிவுபடுத்தினார். இதனால் தமிழகம் முழுவதும் பெண்கள் குஷ்புவுக்கு எதிராக திரண்டு போராட்டம் நடத்தினர். குஷ்புவின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. அதேபோல், பாஜ மேடையில் ஓபிஎஸ்சை வைத்துக்கொண்டு, ஓபிஎஸ்சுக்கு பதில் இபிஎஸ் என உளறினார்.

இதனால் குஷ்பு மீது பாஜ மேலிடம் அதிருப்தி இருந்து வருகிறது. இதுதவிர குஷ்பு மீது தமிழகம் முழுவதும் பெண்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் அவருக்கு சீட் கொடுத்தால், அது கட்சியை கடுமையாக பாதிக்க கூடும் என கருதியே அவருக்கு எம்பி சீட் வழங்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் பெண்கள் குஷ்பு மீது அதிருப்தியில் இருந்து வருவதால் பிரசாரத்துக்கு கூட குஷ்புவை அழைப்பார்களா’ என சந்தேகம் தான் என்றனர்.

The post ராதிகாவுக்கு ‘சீட்’ புலம்பும் குஷ்பு: ஓரங்கட்டும் பாஜ appeared first on Dinakaran.

Related Stories: