“வீழட்டும் பாசிசம், வெல்லட்டும் ஜனநாயகம்” ஒன்றியத்தில் மலரட்டும் திராவிட மாடல் ஆட்சி என்ற புத்தகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: “வீழட்டும் பாசிசம், வெல்லட்டும் ஜனநாயகம்” ஒன்றியத்தில் மலரட்டும் திராவிட மாடல் ஆட்சி என்ற புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பரப்புரை செய்யும் விதமாக தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முயற்சியில் தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான “வீழட்டும் பாசிசம்! வெல்லட்டும் ஜனநாயகம்” ஒன்றியத்தில் மலரட்டும் திராவிட மாடல் ஆட்சி என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

“மலரட்டும் ஒன்றியத்தில் திராவிட மாடல் அரசு” என்ற தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ் எழுதியுள்ள முன்னுரையுடன்; மேற்கு வங்க மாநில முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் கோ.பாலசந்திரன், எழுதியுள்ள “மோடியின் எழுச்சியும், ஜனநாயகத்தின் வீழ்ச்சியும்”; ஊடகவியலாளர் திருமாவேலன் எழுதிய “மோடி-சமூக அநீதியின் நாயகன்”; திமுக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எழுதிய “மாநில உரிமைகளைப் பந்தாடும் பாசிச பா.ஜ. அரசு”; தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் வி.கே.வி. துரைசாமி எழுதிய “பாஜ ஆட்சிக் காலம் விவசாயிகளுக்கான கேடு காலமாக அமைந்தது”; திமுகவின் மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன் எழுதிய “பாரதிய (தீய) ஜனதா கட்சியின் அரசாட்சியில் நாடாளுமன்றத்தின் அவல நிலை”; அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ எழுதிய “வங்கித் துறையைச் சீரழித்த மோடி அரசு”.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் எழுதிய “மோடி ஊழலை ஒழிக்கவில்லை; ஒளிக்கிறார்”; பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் எழுதிய “இந்தியாவில் வரிமுறைகளும், செல்வம் பரவலும்”; ஊடகவியலாளர் செந்தில்வேல் எழுதிய “பாஜக ஆட்சியும் கேள்விக் குறியாகும் இந்தியப் பாதுகாப்பும்”; பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு எழுதிய “மோடி-சமூக அநீதியின் நாயகன்”; மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எழுதிய “மோடி vs இந்திய சிறுபான்மை மக்கள்”; ஊடகவியலாளர் டி.அருள் எழிலன் எழுதிய “மோடியை அரண் செய்யும் GODI MEDIA”; மகிழன் எழுதிய “மோடியின் தேர்தல் பத்திரங்கள்.

மோசடியும் ஜனநாயக படுகொலையும்”; இளங்கோவன் முத்தையா எழுதிய “இங்கு ஹிந்து ராஷ்ட்ரம்தான்: அதன் அதிபர் மோடி”; பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதிய “ஊழலின் ஊற்றுக்கண் பா.ஜ.க.”; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் எழுதிய “உரிமைகள் பறிபோனால் எதையுமே தக்க வைக்க முடியாது”. “சிறு குறு நிறுவனங்களின் இன்றைய நிலை” குறித்த கட்டுரையும் வெளியாகியுள்ளது. இப்புத்தக வெளியீட்டு நிகழ்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச் செயலாளர் சுபேர் கான், ஊடகவியலாளர் செந்தில்வேல் ஆகியோர் பங்கேற்றனர்.

The post “வீழட்டும் பாசிசம், வெல்லட்டும் ஜனநாயகம்” ஒன்றியத்தில் மலரட்டும் திராவிட மாடல் ஆட்சி என்ற புத்தகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: