போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் ஐபிஎஸ் முன்னாள் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றவாளி: 26 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

பலன்பூர்: குஜராத் மாநிலம் பலன்பூர் நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த சுமர்சிங் ராஜ் புரோகித் என்ற வழக்கறிஞர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி அவரை எஸ்.பி சஞ்சீவ் பட் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ராஜ் புரோகித் குற்றமற்றவர் என்பது நிரூபணமானது. இதையடுத்து சஞ்சீவ் பட் மீது வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த விவகாரத்தில் கடந்த 2015ம் ஆண்டு சஞ்சீவ் பாட் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 26 ஆண்டுகளான நிலையில், பொய் வழக்கில் வழக்கறிஞரை சிக்க வைத்த சஞ்சீவ் பாட் குற்றவாளி என பலன்பூர் நகர செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும்.

The post போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் ஐபிஎஸ் முன்னாள் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றவாளி: 26 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: