தனது தந்தையின் நினைவிடத்தில் இருந்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தேர்தல் பிரசாரம் தொடங்கினார்: குண்டு துளைக்காத பஸ்சில் 21 நாள் யாத்திரை

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தனது தந்தையின் நினைவிடத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதையொட்டி 21 நாட்கள் குண்டு துளைக்காத பஸ்சில் யாத்திரை மேற்கொள்கிறார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி நாங்கள் தாயார் என்ற பிரசார பஸ் பயணத்தை கடப்பா மாவட்டம் இடுபுலபாயவில் உள்ள தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான ராஜசேகர் ரெட்டியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி நேற்று தொடங்கினார். மேலும் தனது தாயார் விஜயம்மா, இந்து, கிறிஸ்துவ, முஸ்லிம் மத தலைவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

இதில் கடப்பா எம்.பி. ஒய்.எஸ்.அவினாஷ், ஜெகனின் மாமா ரவீந்திரநாத் மற்றும் கடப்பா மாவட்ட தலைவர்கள் யாத்திரைக்கு தயாராக குண்டு துளைக்காத பஸ்சில் ஏறி இடுபுலபாய, வேம்பள்ளி, வீரபுநாயுனப்பள்ளி, யர்ரகுன்ட்லா வழியாக புரோதட்டூரை சென்றடைந்தனர். அங்கு நடந்த கூட்டத்தில் பொது மக்கள் மத்தியில் பஸ்சில் இருந்தபடி பிரசாரம் மேற்கொண்டார். இந்த பஸ் பயணம் இடுபுலபாய முதல் இச்சாபுரம் வரை 21 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. புரோட்டாட்டூர் பைபாஸ் ரோடு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசி அங்கிருந்து நந்தியாலா மாவட்டம் அலகட்டாவுக்கு சென்று இரவு அலகட்டாவில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரவு தங்கி மீண்டும் தனது பஸ் யாத்திரையை இன்று தொடர்ந்து மேற்கொள்ள உள்ளார்.

The post தனது தந்தையின் நினைவிடத்தில் இருந்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தேர்தல் பிரசாரம் தொடங்கினார்: குண்டு துளைக்காத பஸ்சில் 21 நாள் யாத்திரை appeared first on Dinakaran.

Related Stories: