பெண்கள் பற்றி இழிவான பேச்சு பாஜ எம்பி, காங். தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜ எம்பி திலீப் கோஷ், அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து மிகவும் இழிவான கருத்துகளை தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய இந்த பேச்சை கண்டித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் இது பற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தண்கள் பற்றி இழிவாக கருத்து தெரிவித்ததற்காக பாஜ எம்பி திலீப் கோஷ் மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரிநேட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் பாஜ வேட்பாளராக போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத்தை காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவரான சுப்ரியா ஷிரிநேட் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெண்கள் குறித்து இழிவாக கருத்து தெரிவித்தற்காக திலீப் கோஷ், சுப்ரியா ஷிரிநேட் ஆகியோரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், திலீப் கோஷ், சுப்ரியா ஷிரிநேட் ஆகியோரின் கருத்துகள் கண்ணிய குறைவாகவும் தரம் தாழ்ந்த வகையிலும் உள்ளன. இதில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதற்கான முகாந்திரம் உள்ளது. நாளை மாலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

The post பெண்கள் பற்றி இழிவான பேச்சு பாஜ எம்பி, காங். தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: