சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது!

சென்னை: ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. சென்னை அணி அதிரடியாக விளையாடி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.

கடின இலக்கை துரத்திய குஜராத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்கள் தங்கள் ஓவர்களை சரியான நேரத்தில் முடிக்காததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக ஐபிஎல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறைந்தபட்ச ஓவர் விகிதம் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின்படி, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுபம் கில் ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சீசனில் முதல் பெனால்டியை கில் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் சுப்மன் கில் 5 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. புள்ளிகள் பட்டியலில் 6வது இடம்.

The post சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது! appeared first on Dinakaran.

Related Stories: